இத்தனை கோடியா.? பொங்கலுக்கு அரசு பேருந்துக்கள் இயக்கியதில் கொட்டிய வருவாய்- வெளியான பட்டியல்

By Ajmal Khan  |  First Published Jan 24, 2025, 9:20 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 1,87,617 பேருந்துகள் இயக்கப்பட்டு, 12.81 கோடி மக்கள் பயணித்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் ரூ.237.47 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட ரூ.44.69 கோடி அதிகம்.


தொடர் விடுமுறை- சிறப்பு பேருந்து

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். அந்த வகையில் அரசு பேருந்துகள், ரயில்கள், தனியார் பேருந்துகளில் மக்களின் கூட்டம் அலைமோதும். மேலும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தும் விட்டது. தனியார் பேருந்துகளில் விமான கட்டணத்தை விட அதிகளவு கட்டணம் வசூல். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு கை கொடுத்தது அரசு பேருந்து தான். அந்த வகையில் இந்தாண்டு தமிழகம் முழுவதும் பல லட்சம் பேருந்துகள் இயக்கப்பட்டு பல கோடி ரூபாய் வருவாயை போக்குவரத்து கழகம் ஈட்டியுள்ளது.

Latest Videos

பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்து

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,87,617 பேருந்துகள், சென்னை உட்பட, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிகள் சிரமமின்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 10/01/2025 முதல் 19/01/2025 வரை இயக்கப்பட்டது. மேலும், இவ்வருடம் 37832 பேருந்து சேவைகள் கடந்த ஆண்டை விட கூடுதலாக பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டது.

மேற்கண்ட பொங்கல் பேருந்து இயக்கத்தின் வழியாக அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களும் சுமார் ரூ.237.47 கோடி அளவில் இயக்க வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.44.69 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடதக்கது. பொங்கல் திருநாளையொட்டி இவ்வருடம் ஜனவரி 10 முதல் 19 தேதி வரை இயக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் சுமார் 12.81 கோடி பொதுமக்கள் பயணித்து, எவ்வருடமும் இல்லாத வகையில் பெருந்திரளாக போக்குவரத்து வசதியினை அரசு பேருந்துகள் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிபிட்டதக்கது. கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் சுமார் 2.46 கோடி பயணிகள் கூடுதலாக இவ்வருடம் பயணித்தனர்.

கோடியில் கொட்டிய வருவாய்

மேலும், இவ்வருடம் 4,24,168 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் முன்பதிவு செய்து பயணம் செய்த 3,34,720 பயணிகளை விட 2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் 27 சதவிகிதம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் எனவே பயணிகளின் வசதிகேற்ப குறைவான கட்டணங்களில் பல்வேறு வகையான பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக இயக்கப்படுவதால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!