இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்து.! கோயம்பேடு, கிளாம்பாக்கத்திற்கு செல்ல சிறப்பு ஏற்பாடு-போக்குவரத்து கழகம்

By Ajmal Khan  |  First Published Jan 12, 2024, 9:13 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூருக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க 6 இடங்களில் தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு பயணிகள் சென்று சேரும் வகையில் 450 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 


பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையானது விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை உறவினர்களோடு கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஒரே நேரத்தில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு செல்வதால் பேருந்து கிடைக்காத நிலை உருவாகும், மேலும் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதற்காக பல மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து சேவையை 6 இடங்களுக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு செல்ல சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பொங்கல் சிறப்பு பேருந்துகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, வெளியூர் பயணிகள் ஆறு பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 450 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள தகவலில், 15.01.2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 12.01.2024 முதல் 14.01.2024 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள ஆறு இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையம்

1. கோயம்பேடு பேருந்து நிலையம்

2. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

4. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்/பூவிருந்தவல்லி Bye Pass

5. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் பேருந்து நிலையம்

6. கே.கே.நகர் பேருந்து நிலையம்

 

450 கூடுதல் பேருந்துகள்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட ஆறு பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 450 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 12.01.2024 முதல் 14.01.2024 ஆகிய 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

மேலும், பொங்கல் பண்டிகை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக 17.01.2024 புதன்கிழமை மற்றும் 18.01.2024 வியாழக்கிழமை அன்று மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) பேருந்துகள் 50 பேருந்துகள் மற்றும் 18.01.2024 வியாழக்கிழமை 19.01.2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 125 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

Transport Workers: 1,12,675 அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

click me!