கருணாநிதி பிறந்தாள் விழா.! பள்ளி மாணவர்களுக்கு புதிய வகை உணவு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Published : May 17, 2023, 09:50 AM IST
கருணாநிதி பிறந்தாள் விழா.! பள்ளி மாணவர்களுக்கு புதிய வகை உணவு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தாளையொட்டி ஆண்டு தோறும் சத்துணவு மையங்களில் இனிப்பு பொங்கல் வழங்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14.40 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் நூற்றாண்டு விழா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை திமுக மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்ன ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தார். இதனையடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு சக்கரை பொங்கல்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திய குறிப்பில், சத்துணவு/குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் மாணவியர்களுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக மாணவ அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும். இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றம் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான 03.06.2023 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 இலட்சம் மாணவ மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர் என சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்..? கருணாநிதி பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட தயாராகும் ஸ்டாலின்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!