கோவையில் திடீரென குவிந்த போலீசார்..! தீவிர வாகன சோதனை..! என்ன காரணம் தெரியுமா..?

By Ajmal Khan  |  First Published Nov 29, 2022, 12:13 PM IST

கோவையில் 1997 ம் ஆண்டு காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து 18 இஸ்லாமியர்கள் கலவரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த தினம்யொட்டி எந்தவித சமூக பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக  கோவை நகரில் 1476 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 29 ம் தேதி  காவலர் செல்வராஜ் அல் உம்மா தீவிரவாத அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில்  18 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர்.

24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்..! அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது ஏன் ..! ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Tap to resize

Latest Videos

 காவலர் செல்வராஜ் மற்றும் 18 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி எந்த வித அசம்பாதவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில்  கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை நகரில்  1476 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையம், முக்கிய  கோவில்கள்,மசூதிகள் முன்பு  மாநகர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

click me!