சினிமா பாணியில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சல்

சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து  பொள்ளாச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. மணப்பாறை அருகே நடுப்பட்டி என்ற இடத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது.

சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து  பொள்ளாச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. மணப்பாறை அருகே நடுப்பட்டி என்ற இடத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது.

Latest Videos

இதையும் படிங்க;- எமன் ரூபத்தில் வந்த கடற்கரை பேருந்து! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி! வயிற்றிலேயே குழந்தை பலி.!

இந்த விபத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மண்ணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!

click me!