ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு... வெளியானது புதிய விலை பட்டியல்!!

By Narendran S  |  First Published Sep 30, 2022, 10:39 PM IST

ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டணங்களை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. 


ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டணங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஏற்கனவே தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் விற்பனை நிறைவு பெற்று விட்ட நிலையில் தட்கல் முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்ய ஏராளமானோர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உண்மை தன்மையை அறிந்து சமூக வலைதளத்தில் செய்தியை பகிருங்கள்… Twitter Spaces-ல் ஸ்டாலின் உரை!!

Tap to resize

Latest Videos

ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்துடன் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளுக்கான புதிய கட்டணங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் 1815 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 3025 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்சம் 1739 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2632 ரூபாய் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைக்கு தமிழில் பெயர் வச்சுருக்கீங்களா? அப்போ இதை படிங்க... மா.சுப்ரமணியனின் சூப்பர் அறிவிப்பு!!

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 1271 அதிகபட்சமாக 1767 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை - பழனிக்கு ரூ.1,650 முதல் ரூ.2,750 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - சேலத்துக்கு ரூ.1,435 முதல் ரூ.2,109 வரையிலும், சென்னை- தென்காசி ரூ.2,079 முதல் ட்ரூ.3,465 வரையிலும் வசூலிக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.2,063 முதல் ரூ.3,437 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

click me!