#Breaking : Omicron : உச்சகட்ட பரபரப்பு... தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்!!

Published : Dec 31, 2021, 08:03 PM IST
#Breaking : Omicron : உச்சகட்ட பரபரப்பு... தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்!!

சுருக்கம்

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. கர்நாடகாவில் 66 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமைக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரானை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 115 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 120 பேரில் 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி