
முதியவரைகுப்பைமேட்டில் போட்ட அரசு மருத்துவமனை...! டெங்குக்கு எப்படியோ..!
டெங்குவால் தமிழகம் முழுவதுமே, பெரும் பதற்றமாக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சில நிகழ்வுகள் மக்கள் மனதை வெகுவாக பாதிக்கிறது
அவ்வாறு நடந்த ஒரு சம்பவம் இப்போது பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதவரற்ற முதியவர் ஒருவர் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரால் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து சென்று இயற்கை உபாதைகளை கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது
தமிழ் பேசத் தெரியாத அவர் இயற்கை உபாதைகளைப் போக்கிக்கொள்வதைக்கூட தானாக செய்துகொள்ள முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.
பின்னர் இந்த முதியவரை, மருத்துவமனைக்கு எதிரே உள்ள குப்பை மேட்டில் படுக்க வைத்துள்ளனர்.இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பின்னர் இந்த முதியவரை காண மீடியாக்கள் வரவே,உடனே அந்த முதியவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறது அரசு மருத்துவமனை