
நடுக்கடலில் கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், கடற்கரை முழுவதும் கச்சா எண்ணெய் பரவியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அருகே எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எரிவாயு ஏற்றி கொண்டு கடந்த வாரம் ஒரு கப்பல் வந்தது. எரிவாயுவை இறக்கிவிட்டு, கடந்த சனிக்கிழமை இருக்கு புறப்பட்டது. அப்போது, மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிகொண்டு டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது பயங்கரமாக மோதியது.
இதில், கப்பலில் இருந்த வால்வுகள் உடைந்து, அதில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்த்து. இந்த கச்சா எண்ணெய் சென்னை நகரை ஒட்டியுள்ள கடற்கரையில் மிதந்து கிடக்கிறது.
குறிப்பாக எண்ணூர் பாரதியார் நகர் அருகே அதிகப்படியான டீசல் படிந்து இருக்கிறது. கடலோர காவல் படையின், சுற்றுச்சூழல் பொறுப்பு குழுவினர் மற்றும் மீனவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கடலில் கலந்துள்ள ஆயிலை அகற்றும் பணியி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா, நடுக்கடலில் விபத்து ஏற்படுத்திய எரிவாயு ஏற்றி வந்த கப்பல் மீது மீஞ்சூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, தடையை மீறி கடல் வழி தடத்தில் சென்றது, கச்சா எண்ணெய்யை கடலில் கடலந்து மாசு ஏற்படுத்தியது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.