ஒகி புயல் ஒரு தேசிய பேரிடர் !!  மத்திய அரசிடம் வலியுறுத்திய பினராயி விஜயன் !!!

 
Published : Dec 03, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஒகி புயல் ஒரு தேசிய பேரிடர் !!  மத்திய அரசிடம் வலியுறுத்திய பினராயி விஜயன் !!!

சுருக்கம்

ogi strom is a nationl calavity....binarayee ...binarayee vijayan

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்திய ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசிடம்  வலியுறுத்தியுள்ளார்

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில்  நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியதையடுத்து குமரி மாவட்டம் பேரிழப்பை சந்தித்தது. மாவட்டம் முழுவதும் இந்த புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

2000 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால் மாவட்டம்  முழுவதும் தற்போது வரை இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. 20000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. புயல், மழைக்கு 9 பேர் பலியாகினர். ஆறுகள், களங்கள் உடைந்து சாலைகள் அரித்துச் செல்லப்பட்டன. இதனால் சாலைப்போக்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இப்படி குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்ட  ஒகி புயல், திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றதால், கேரளாவிலும்  கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால்  கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால், கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற  300 க்கும் அதிகமான மீனவர்கள் நடுக்கடலில் ஒகி புயலுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஒகி புயலால், கேரளாவின் பல பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த பாதிப்பு குறித்து கேரள அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தயாரித்து வருவதாகவும், அதை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும்  பினராயி தெரிவித்தஇதையடுத்து ஒகி புயலால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன்  வலியுறுத்தியுள்ளார்.

ஒகி புயல் குறித்து மத்திய அரசு எந்தவித முன் எச்சரிக்கையையும் உரிய நேரத்தில் கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் பினராயி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!