
திருப்பூர்
திருப்பூர் ஆட்சியரகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், "உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலத்தை போலீஸ் மூலம் மிரட்டி பறிக்கின்றனர்" என்று ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
பல இடங்களில் நிலத்தை கையகப்படுத்த வரும் அதிகாரிகள் காவலாளர்கள் துணையுடன் விவசாயிகளை மிரட்டி நிலத்தை பறிக்கின்றனர். இதனையும் தடுக்க வேண்டும். இக்கோரிக்கையை சொல்லும்போது அனைத்து விவசாயிகளும் எழுந்து விளை நிலங்களை பறிக்க கூடாது என்று முழக்கமிட்டு வலியுறுத்தினர்.
பின்னர், உயரழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் விவசாயிகள் அனவைரும் ஒன்று சேர்ந்து திரளாக மனு கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.