
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனனையில் இருப்பதால் இந்த ஆண்டு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு தீபாவளி பிரச்சனைக்குரிய தீபாவளியாக மாறிப்போனது.
தீபாவளி பண்டிகை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பண்டிகையாக மாறிப்போனது. அரசு அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் தயவு வேண்டி தொழிலதிபர்கள், வியாபாரிகள் , புரோக்கர்கள் , டெண்டர்போடுபவர்கள் , குற்றவாளிகள் , போலீஸ் அதிகாரிகளின் தயவை நாடுபவர்கள் என ஒரு காக்கா கூட்ட பெரிய பட்டாளமே டிஜிபி அலுவலகத்திலும் , தலைமை செயலகத்திலும், வேப்பேரி கமிஷனர் அலுவலகத்திலும் , மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்திலும் . இன்னும் பிற செல்வாக்கு மிக்க இடங்களிலும் அலைமோதும்.
இவர்கள் அதிகாரிகளுக்கு அளிக்கும் ஸ்வீட்டுகள் , அன்பளிப்புகள் , பட்டாசுகள் என குவியும் பட்டியலை பார்த்தால் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் அடுத்து ஒருவருடம் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு ஸ்வீட்டுகளும் , பாட்டாசுகளும் இன்னும் பிற அன்பளிப்புகளும் குவியும்.
அதிலும் அந்த அதிகாரி முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டால் போதும் வரும் பரிசுப்பொருட்கள் இருக்கிறதே அதற்கு எல்லையே இருக்காது. நாளைமுதல் தீபாவளி முடியும் வரை இந்த பரிசு பொருட்கள் கொடுக்கும் காக்கா கூட்ட அணிவகுப்பை எல்லா அரசு மற்றும் காவல்துறை அலுவலகங்களில் காணலாம்.
இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புன்சிரிப்புடன் ஏற்று கொள்வார்கள். இது போன்று பரிசு பொருட்களை வாங்கக்கூடாது என அரசு விதி இருந்தும் அது சாதாரணமாக அப்படி ஒரு விதி இருக்கிறதா என நம்மையே கேள்வி கேட்பார்கள். பாண்டிச்சேரியில் இது போன்ற விதியை கவர்னர் கிரண்பேடி கட்டாயமாக அமல் படுத்தியுள்ளார். யாரும் அதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது யாரும் வாங்கவும் கூடாது என கட்டாயமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருப்பதால் பண்டிகையை ஒட்டி தொழிலதிபர்கள் , நிறுவனங்கள் , காண்ட்ராக்ட்தாரர்கள் அளிக்கும் அன்பளிப்புகளை ஏற்க்கலாமா அப்படி ஏற்றால் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் போது தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என யாராவது போட்டுகொடுத்தால் என்னாவது என யோசித்து வருகின்றனர்.
இதனால் பரிசுப்பொருட்களை வாங்கலாமா என யோசித்து வருகின்றனர்.