ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னம்? 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published : Aug 15, 2018, 01:15 PM ISTUpdated : Sep 09, 2018, 07:50 PM IST
ஒடிசா அருகே வங்க கடலில் புயல் சின்னம்? 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சுருக்கம்

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது முதல் மழை பெய்யும். சென்னை, புறநகரில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் புவனேஸ்வர் அருகே மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா, கடலோர கர்நாடகா மற்றும் கேரளா, உ.பி., அசாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்க கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் பகுதியில் 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். குஜராத், கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரை தமிழகத்தில் மிக அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 27 செ.மீ., சின்ன கல்லாரில் 21 செ.மீ., பேச்சிப்பாறையில் 20 செ.மீ., பாபநாசத்தில் 19 செ.மீ., வால்பாறையில் 16 செ.மீ., தோவாலாவில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.. வீடு தேடி வரும் குழு.. சூப்பர் அறிவிப்பு!
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! போர்க்களமாக மாறிய போயஸ்கார்டன்