தீபாவளிக்கு மறுநாள்.. அக்டோபர் 25 ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

By Raghupati R  |  First Published Oct 23, 2022, 10:30 PM IST

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் 25.10.2022 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் 25.10.2022 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

click me!