மருத்துவமனைகளுக்கு போகாமல்  போராட்டம் நடத்தும் நர்ஸ்கள்…. கைது செய்யப்பட்டதால் பரபரப்பு !!!

 
Published : Nov 27, 2017, 08:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
மருத்துவமனைகளுக்கு போகாமல்  போராட்டம் நடத்தும் நர்ஸ்கள்…. கைது செய்யப்பட்டதால் பரபரப்பு !!!

சுருக்கம்

nurses protest in dms office chennai

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் நர்ஸ்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி, இன்று முற்றுக்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுககையிட்ட 1500 க்கும் மேற்பம்ம நர்ஸ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவப் பணியாளர் பணி நியமன வாரியம் மூலம், 11 ஆயிரம் நர்ஸ்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தி, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முறையாக நியமனம் பெற்ற இவர்களை, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, பணி நிரந்தரம் செய்யவில்லை.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸ்களுக்குரிய சம்பளம், அலவன்ஸ் தொகைகளும் தருவதில்லை. வெறும், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிறார்கள். ஆனால், கடந்த நான்கு மாதம் முன்பு தேர்வு செய்யப்பட்ட கிராமப்புற நர்ஸ்கள் 2,800 பேரை, பணி நியமனம் செய்து காலமுறை ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், லேப் டெக்னீசியன், மருந்தாளுனர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, நர்ஸ்கள் பணி நிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த நர்ஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த  1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு திரண்டனர். தொடர்ந்து அவர்கள்  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நர்ஸ்களை போலீசார் கைது செய்து டிஎம்எஸ் அலுவலக  வளாகத்துக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

இதே போல் தமிழகம் முழுவதும ஒப்பந்த நர்ஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!