ஒழுங்கா என் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்; இல்லையென்றால்? சீமான் மிரட்டல் பேச்சு

By Velmurugan s  |  First Published Apr 9, 2024, 5:30 PM IST

மக்களவைத் தேர்தலில் என் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்துவிடுங்கள். இல்லையென்றால் வட இந்தியர்கள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்று கூறினால் நானும் சேர்ந்து வந்து அடிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.


ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் கார்மேகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் திறந்த வாகனத்தில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மதம், ஜாதி, கடவுளைப் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்தனை கொள்ள மாட்டான். மக்கள் நலனை பற்றி சிந்திப்பவனுக்கு ஜாதி, கடவுளைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. 

Latest Videos

தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்தது மட்டுமல்லாது கச்சத்தீவை பற்றி பேசுவதற்கு காரணம் தேர்தல். மேலும் 200 பொருட்களுக்கு வட இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற்றுள்ளனர். மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என தெரிந்திருக்கின்ற நிலையில் ஏன் இந்த வரியை எதிர்த்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இவை அனைத்துக்கும் உங்களது வாக்குகளும், ஓட்டுகளுக்காகவும் குறைத்துள்ளனர். அண்ணாமலையை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதால் அவரை வைத்து கச்சத்தீவு பிரச்சனையை பாரதிய ஜனதா கட்சியினர் கையில் எடுக்கின்றனர். 

பிரசாரத்தின் போது பெண்களை இழிவாக பேசிய அதிமுக எம்எல்ஏ; ஆத்திரத்தில் பிரசார வாகனத்தை உடைத்த மக்கள்

பிரதமர் மோடியின் அருகே பல அதிகாரிகள் உள்ள நிலையில் ஏன் அண்ணாமலையை வைத்து தகவல் உரிமை அறியும் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். வெள்ளை என்பது நிறம், அழகு அல்ல. இவ்வளவு பேசும் நான் வெள்ளையாக இருந்திருந்தால் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருப்பேன். இந்த சமுதாயத்தை செதுக்க வேண்டும் என்றால் தன்னலமற்ற சர்வாதிகா ர ஆட்சி முறையால் மட்டுமே முடியும். 

2019ல் பாலை குடித்து ருசிகண்ட பூனை மீண்டும் வருகிறது; ஏமார்ந்து விடாதீர்கள் முதல்வர் குறித்து வானதி விமர்சனம்

எனது நிறம் கருப்புதான் உழைக்கும் மக்களின் நிறம் கருப்பு. மனிதன் நோய்க்கு மருந்து கொடுத்தவர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்மேகன். இப்போது தேர்தல் நோய்க்கு மருந்து கொடுக்க இருக்கிறார். அவருக்கு ஒழுங்காக வாக்கு செலுத்தி அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையெனில் வட இந்தியர்கள் அடிக்கிறார் என கூறினால் நானும் சேர்ந்து வந்து அடிப்பேன். என்னை வெற்றி பெறவைத்தால் எந்த ரயில் ஏறி வந்தார்களோ அதே ரயிலில் போகவில்லை எனில் என்னை கேளுங்கள் என்றார்.

click me!