இனி பிரசவம் முடித்த தாய், சேய் பாதுகாப்பா வீட்டுக்கு போகலாம்; அதுவும் இலவசமா…

 
Published : Feb 23, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
இனி பிரசவம் முடித்த தாய், சேய் பாதுகாப்பா வீட்டுக்கு போகலாம்; அதுவும் இலவசமா…

சுருக்கம்

நாகர்கோவில்

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பின்னர் தாயையும், சேயையும் வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இலவச ஊர்தியை ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பின்னர் தாய் மற்றும் குழந்தையை அவர்களது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வசதியாக இலவச தாய்சேய் ஊர்தி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்டத்திற்கு இலவச தாய்சேய் ஊர்தி நேற்று வந்தது. இந்த தாய்சேய் ஊர்தியை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறியது:

“குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த தாய் மற்றும் சேய் ஆகியோரை பாதுகாப்பாக அவர்களது வீட்டிற்குக் கொண்டுச் சென்று சேர்க்கின்ற முக்கியமான பணிகளை இந்த இலவச தாய் சேய் ஊர்தி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான இந்த பிரத்தியோக வாகனம் குமரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நலக்குழுமம் ஜனனி சிசு சுரக்‌ஷா கார்யாகிரம் திட்டத்தின் மூலம் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வாகனங்கள் கிடைக்கப்பெற்று இந்த பணி முழுமையாக செயல்படுத்தப்படும்.

தாய்சேய் வாகனங்களின் பணியாளர்களை அமர்த்துதல், பராமரிப்பு ஆகிய பணிகள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் தாய்மார்கள் இலவச தொலைபேசி எண்ணான 102 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், தாய்மார்கள் அரசு வழங்கிய இந்த சேவையினை முழுமையாக பெற்று பயனடையலாம்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் இரவீந்திரன், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) வசந்தி, உறைவிட மருத்துவர் மேரி விஜயா, உதவி உறைவிட மருத்துவர் ஆறுமுகம், ரியாஸ் அகமத், இந்தியச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெபர்சிங் உள்பட கலந்து கொண்டனர். 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!