மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு.! கல்வி ஊக்கத்தொகை பெற உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

By Ajmal Khan  |  First Published Dec 31, 2024, 7:45 AM IST

 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதுப்பித்தல் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


கல்விக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க எந்த வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக இலவச கல்வியை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலசவ பஸ் பாஸ், இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் உயர் கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டமும் நடைமுறையில் இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி தடை படாமல் அதிகரித்துள்ளது. மேலும் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆதி திராவிட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

இது  தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர் செயற்படுத்தப்படும் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

திட்ட விதிமுறைகள் மற்றும்  மாதிரி விண்ணப்ப படிவம்  www.tn.gov.in/forms/deptname/1 என்ற முகவரியில் யாவரும் பதிவிறக்கி இணையதள பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் 31.01.2025 முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நாளன்று மாலை 5.45 மணிக்குள்,"இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்ன அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!