தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு- எந்த எந்த மாவட்டங்கள் என தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jul 21, 2023, 4:15 PM IST

வடகிழக்கு பருவமழை குறைந்ததால் 2022 ஆண்டு புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சி பகுதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  


மழை பொழிவு குறைவு- வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பு

ஆண்டு தோறும் மழைப்பொழிவையொட்டி வறட்சி மாவட்டம், வறட்சி இல்லாத மாவட்டம் என பிரிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் மழையானது குறைவாக பதிவாகியிருந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவினால் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி மழைப்பொழிவு குறைவான காரணத்தினால் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

Tap to resize

Latest Videos

6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள்

ராமநாதபுரம்  மாவட்டத்தில்  - போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை வட்டார பகுதிகளும், சிவகங்கை  மாவட்டத்தில்  - தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை வட்டார பகுதிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில்-  ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டார பகுதிகளும் தென்காசி மாவட்டத்தில் -   ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் வட்டார பகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி பகுதியும், விருதுநகர் மாவட்டத்தில்   -  நரிக்குடி, திருச்சுழி வட்டார பகுதி என மேற்கண்ட 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் மிதமான வேளான் வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

மணிப்பூரில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்..! பாஜக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய திமுக- போராட்ட அறிவிப்பு

click me!