அரசு உத்தரவினை மீறிய 981 தனியார் பள்ளிகள்… விளக்கம் கேட்டு நோட்டீஸ்… அன்பில் மகேஷ் தகவல்!!

By Narendran SFirst Published Jul 21, 2022, 6:38 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 5 நாட்கள் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யும் திட்டம் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒருசில காரணங்களுக்காக மாணவ மாணவிகள் தவறான முடிவுகளை எடுப்பது குறையும். மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..

வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்காது. மாணவ மாணவிகள் கவனத்தை ஒழுங்குப்படுத்தி படிப்பில் முழு கவனத்தினை செலுத்துவதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித் துறையில் பழைய நடைமுறையை மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டு வந்திருக்கின்றோம். அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாக உள்ளது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனைப் பெற்றோர்கள் உணரவேண்டும். நான் முதல்வன் திட்டமும் இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.   

click me!