2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெருபான்மையோடு வென்று ஆட்சியமைக்கும். தேசிய கட்சிகள் வெற்றி பெறும் வரை பயன்படுத்துகின்றனர். அதன் பின் நம்பை கண்டுகொள்வதில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை.
எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 8 முறை தமிழகத்திற்கு வருகை தந்தார். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள்.
அதேபோல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரும் பரபரப்புரை மேற்கொண்டனர். ஆனால் அதிமுக சார்பில் நானும் தேமுதிக சார்பில் பிரேமலதாவும் பரப்புரை செய்தோம் என்றார்.
மேலும் பேசிய அவர் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயரவில்லை. குறைந்திருக்கிறது. 2019 தேதர்தலில் பல கட்சிகளின் கூட்டணியோடு பாஜக பெற்ற வாக்கை விட 2024ல் குறைவாகவே பெற்றுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜகவை ஒப்பிடுகையில் அதிமுக தான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. 2019 மக்களவை தேர்தலை விட 1 சதவீதம் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே. பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பதுதான் கட்சிகளின் நிலைப்பாடு. அது பின்னடைவு ஆகாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் பின்னடைவாக எடுத்துக் முடியாது என்றார்.
எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்கின்றனர். அதிமுக குறித்து பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது. தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கண்டிருப்பார். அவரது கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சிக்கிறார். கோவையில் கடந்த முறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணாமலை குறைந்த வாக்குகளையே பெற்றார். அதிமுகவை அழித்துவிடுவோம் என ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெருபான்மையோடு வென்று ஆட்சியமைக்கும். தேசிய கட்சிகள் வெற்றி பெறும் வரை பயன்படுத்துகின்றனர். அதன் பின் நம்பை கண்டுகொள்வதில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை. எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. பிளவும் இல்லை. எங்கள் கூட்டணியில் பாஜக இருந்த போது அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என இபிஎஸ் கூறியுள்ளார்.