சி.ஆர்.சரஸ்வதி கலாய்ப்பு - நடந்தது அனைத்து கட்சி கூட்டமே இல்லை. அது தி.மு.க.வின் கூட்டம்

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 10:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
சி.ஆர்.சரஸ்வதி கலாய்ப்பு - நடந்தது அனைத்து கட்சி கூட்டமே இல்லை. அது தி.மு.க.வின் கூட்டம்

சுருக்கம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர்  ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, நடந்தது அனைத்து கட்சி கூட்டமே இல்லை. அது தி.மு.க.வின் கூட்டம் என்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது.

காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும், நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்காக ஜெயலலிதா அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 34 நாட்கள் ஆகிறது. இதையொட்டி, அப்பல்லோ மருத்துவமனை நுழைவாயில் அருகே, அ.தி.மு.க. மகளிரணி சார்பில் காளிகாம்பாள் பூஜை மற்றும் வாராஹி பிரத்யங்கிரா தேவி பூஜை ஆகியவை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், கேரள மாநில கொல்லத்தில் பகவதியம்மன் கோவிலில் இருந்து வந்த நம்பூதிரிகள் குமார், ரிஷிகேஷ் ஆகியோர் பகவதி பூஜை நடத்தினார்கள்.

 

அப்போது, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.:–

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்துவிட்டார். ஆண்டவன் கருணை, முதலமைச்சருக்கு எப்போதும் இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். நாங்கள் இதை சொல்வதில்லை மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாருடைய பிரார்த்தனையும் நிறைவேறிவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்.

தி.மு.க. நடத்தியது அனைத்துக் கட்சி கூட்டமே கிடையாது. அது தி.மு.க.வின் கூட்டம். உண்மையான நோக்கத்தோடு போராடினால் எல்லோரும் ஒன்று சேருவார்கள். அரசியல் லாபத்திற்காக இந்த கூட்டத்தை தி.மு.க. நடத்துகிறது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோது, காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசியதே இல்லை. இன்றுதி.மு.க. நடத்தியது, அரசியல் நாடகம். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

காவிரி நீர் தமிழகத்துக்கு வருகிறது என்றால், அதற்கு காரணம் முதலமைச்சர் ஜெயலலிதா தான். நீதிமன்ற கதவை தட்டி காவிரி நீரை வாங்கிக் கொடுத்தார். உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குகிறது. தொடர்ந்து இந்த பிரச்சனைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா போராடுவார். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பவர் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்