இதோ வந்திருச்சு வட கிழக்கு பருவமழை !!  அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!!

First Published Oct 25, 2017, 1:17 PM IST
Highlights
north east moonsoon wil start with in 48 hours


தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு  சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சீகனில் நல்ல மழை பெய்தது. இந்த மாநிலங்களில் மட்டுமல்லாமல்  தமிழகத்திலும் கன மழை பெய்தது.

குறிப்பாக சென்னை, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தென் மேற்கு பருவ மழையால் நல்ல பலன் பெற்றன. இந்நிலையில் கடந்த வாரம் தென் மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வட கிழக்கு பருவக் காற்று மேலும் வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையால், ஓரளவு பலன் கிடைத்துள்ள நிலையில் தமிழகத்துக்கு உண்மையிலே பலன் தரும் வட கிழக்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளர்.

 

tags
click me!