பால் நிறுவனங்களே சோதனை செய்தால் உண்மை நிலை வெளிவராது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு! 

 
Published : Oct 25, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
பால் நிறுவனங்களே சோதனை செய்தால் உண்மை நிலை வெளிவராது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு! 

சுருக்கம்

Minister Rajendra Balaji appealed

தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் மாதிரியை தாமே ஆய்வு செய்தால் உண்மை நிலை வெளிவராது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் கலப்படம் இல்லை எனவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரமின்றி பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தொடர் வழக்கு விசாரணையில், 3 பால் நிறுவனங்களின் பாலை அங்கீகரிக்கப்பட்ட சோதனை கூடங்களில் சோதனை செய்து 3 மாதத்தில் அறிக்கை தரவேண்டும் எனவும் அதுவரை பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் மாதிரியை தாமே ஆய்வு செய்தால், உண்மை நிலை வெளிவராது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுவில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு