
கந்துவட்டி புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கனும் !! கலெக்டர், எஸ்.பி.க்களுக்கு எடப்பாடி அதிரடி உத்தரவு !!!
அதிக வட்டி வசூல் செய்யப்படுவதாக வரும் புகார்கள் மீது மாவ்டட ஆட்சியர்களும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக வாட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளித்தார்.
இதில் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிக வட்டி வசூல் செய்த இந்த பிரச்சனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கந்துவட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கலாம் என்றும் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதீத வட்டி வசூல் தடை சட்டம் 2003 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட்டிக்கு பணம் பெற்றவர்கள் அதீத வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் கோர்ட்டில் பணம் செலுத்தி நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
.