
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, 13 அப்பாவி பொதுமக்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இப்போது ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடி, சீல் வைத்திருக்கிறது தமிழக அரசு.
இந்த போராட்டத்தின் போது பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனை குறித்து இன்று சட்டப்பேரவையில் வைத்து பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி “ தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய எந்த போராளியும் கைது செய்யப்படவில்லை” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தமிழகத்தில் போராடும் உரிமை மக்களுக்கு இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் தான் 1000க்கும் மேலான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகம் போராட்டங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது, வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் முறையான விசாரணைக்கு பிறகு, தகுந்த ஆதாரத்துடன் கைது செய்யப்படுவர். எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.