சாதி சான்றிதழை கிழிக்க சொன்ன அமீர்; முடியாது என மறுத்த ரஞ்சித்;

 
Published : Jun 04, 2018, 02:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
 சாதி சான்றிதழை கிழிக்க சொன்ன அமீர்; முடியாது என மறுத்த ரஞ்சித்;

சுருக்கம்

famous directors answer for the one who asked to tear the caste certificate

சிவகங்கை மாவட்டத்தில் சாதிப்பிரச்சனை காரணமாக நடந்த, படுகொலை சம்பவம் தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதியின் பெயரால் நடக்கும் இது போன்ற கொலைகளுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிரபல இயக்குனரான பா.ரஞ்சித்தும் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும்  இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்ததுடன் நில்லாமல், இது போன்ற கொலைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்வில் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டிருந்தார் . அப்போது பேசிய அமீர் நானும் ரஞ்சித்தும், சண்டை இட்டு கொண்டிருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி இருந்தன. அவை உண்மை இல்லை. நாங்கள் ஒரே பாதையில் பயணிப்பவர்கள் என தெரிவித்தார்.

அப்போது சாதிய பிரச்சனைகளுக்கு எதிராக பேசுகையில், சாதி வேறுபாடுகள் ஒழிய நாம் அனைவரும் நம்முடைய சாதி சான்றிதழ்களை கிழித்து எறிய வேண்டும் தயாரா? என கேட்டார் அமீர். அப்போது அதற்கு பதிலளித்த ரஞ்சித், இல்லை அப்படி செய்ய முடியாது, இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, படிப்பு, என எல்லாவற்றிர்கும் எங்களுக்கு இந்த சான்றிதழ் தேவை. அதனால் அப்படி எல்லாம் அதை கிழித்தெறிய முடியாது என பதில் தெரிவித்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!