உஷார்...! "1 ரூபா 2 ரூபா அல்ல...7 லட்சம்" வங்கி கணக்கில் இருந்து திருடு...! எப்படி திருடி இருக்காங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...!

 
Published : Jun 04, 2018, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
உஷார்...! "1 ரூபா 2 ரூபா அல்ல...7 லட்சம்" வங்கி கணக்கில் இருந்து திருடு...! எப்படி திருடி இருக்காங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...!

சுருக்கம்

upto 7 lakhs stolen from bank account

உஷார்...1 ரூபா 2 ரூபா அல்ல...7 லட்சம் வங்கி கணக்கில் இருந்து திருடு...எப்படி திருடி  இருக்காங்கனு நீங்களே தெரிஞ்சிகோங்க....

ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது வங்கியில் இருந்து நம்முடைய செல்போனுக்கு வரும் ஓடிபி  எண்ணை தெரியாத நபருடன் பகிர்ந்துக்கொண்டதன் மூலம் 7 லட்சம்  பணம் பறிபோனது

மும்பையை  சேர்ந்த  தஸ்னீம் முஜாகர் மொடாக்.இவரிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் வங்கி ஊழியர் என்றும், தங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டு  உள்ளது  என்றும், அது மீண்டும் செயப்பட வேண்டும் என்றால், சில விவரங்கள் வேண்டும் என  கூறி உள்ளார்.

இதனை நம்பிய  மொடாக், கார்டில் உள்ள 16 இலக்க எண், அதிலுள்ள பெயர் மற்றும் சிவிவி எண் ஆகிவயற்றையும் கொடுத்து உள்ளார்.

இதனை பயன்படுத்தி அவருடைய  வங்கி கணக்கில் இருந்து வேறு வங்கி கணக்கிற்கு  பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் படி, கடந்த மே 17ஆம் தேதி  வங்கி கணக்கில் ரூ.7.20 லட்சம்  பணம் இருந்துள்ளது இதனை தெரிந்துக்கொண்ட  மர்ம  நபர் இவ்வாறு செய்து உள்ளார். ஒரு முறை மட்டுமே  ஓடிபி எண் கேட்டு இவ்வாறு செய்துள்ளார் என்று பார்த்தல்,  அடுத்த ஒரு வாரத்திற்கு இதே போன்று மீண்டும் மீண்டும் போன் செய்து ஓடிபி எண் கேட்டு உள்ளார்.

அந்த பெண்மணியும் கொஞ்சம் கூட சந்தேகம் வரமால் கேட்கும் போதெல்லாம்  எண்ணை கொடுத்து உள்ளார்.

இதன் மூலம் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.6,98,973  திருடு போயுள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில், பணம்  திருடப்படத்தை அறிந்த அவர்  காவல் நிலையம் சென்று,  புகார் அழைத்து உள்ளார்

இது குறித்து நடத்தப் பட்ட விசாரணையில், 3 சிம் கார்டுகளை கொண்டு அழைப்புகள்  விடுக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் மும்பை  நொய்டா குர்கான் கொல்கொத்தா நொய்டா  உள்ளிட்ட  இடங்களிலிருந்த பணம்  திருடப் பட்டு  உள்ளது என்பது முதற்கட்ட  விசாரணையில் தெரிய வந்துள்ளது

ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது எதை பகிர வேண்டும் எதை பகிர கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இது போன்ற இன்னலுக்கு ஆளாகியுள்ளார்  இந்த பெண்மணி.

இந்த சம்பவம் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

                                            

PREV
click me!

Recommended Stories

பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி.. என்.டி.ஏ.வில் இணையும் ஓபிஎஸ், டிடிவி.. உருவாகும் மெகா கூட்டணி!
விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!