
கருணாநிதிக்கு வைர விழா எடுத்து அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துவந்து கொண்டாடினாலும், மு.க.ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அங்கீகாரம் கிடைக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால், குடிநீர், டாஸ்மாக் போன்ற பிரச்சனைகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தனியார் பாலாக இருந்தாலும், ஆவின் பாலாக இருந்தாலும், ரசாயனம் கலக்கப்பட்டிருந்தால் அதனை செய்ய வேண்டம் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் சத்துப் பொருளாக இருந்த பால் தற்போது விவாதப் பொருளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை கூறினார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய அளவில் தலைவர்களை அழைத்து வந்து கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவை நடத்தினாலும், அவருக்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைக்காது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.