பஸ் வேண்டாம்.. விமானத்தில் பறக்கலாம் ராமேஸ்வரம், தஞ்சை, வேலூருக்கு விரைவில் விமான சேவை...

 
Published : Aug 07, 2017, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
பஸ் வேண்டாம்.. விமானத்தில் பறக்கலாம் ராமேஸ்வரம், தஞ்சை, வேலூருக்கு விரைவில் விமான சேவை...

சுருக்கம்

no need bus rameshwaram thanjour vellore district lunch airways

மத்திய அரசின் மண்டலங்களை இணைக்கும் விமானச் சேவைத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

மாநில அரசும், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையமும் இந்த 3 நகரங்களுக்கும், நகரங்களுக்கு இடையேயும் விமானப் போக்குவரத்து வசதியை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர்கூறுகையில், “ ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவது குறித்து கடந்த வாரம்  மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் வேலூருக்கு முதலில் விமானச் சேவை தொடங்கப்பட முடிவுசெய்யப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டே விமான நிலையம் தொடங்குவதற்கான நிலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விட்டது. ஏறக்குறைய 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

ஏராளமான வடமாநில மக்கள் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரிக்கு வருகை தருகிறார்கள். மேலும், ஏலகிரி சுற்றுலா தளம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஆகியவை இருப்பதால் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் பாரம்பரிய இந்துமக்கள் சுற்றுலாதளம் என்பதால் இங்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இருந்து இந்துக்கள், ராமேஸ்வரத்துக்கு எளிதாக பயணிக்கும் வகையில் அங்கு விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக உச்சப்புளி விமான நிலையத்தை தயார் செய்து வருகிறோம். தஞ்சையில் விமானப்படை தளம் இருப்பதால், அதையே பயன்படுத்தி, விமானநிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!