அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - 2 பேர் பலி...

 
Published : Aug 07, 2017, 06:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - 2 பேர் பலி...

சுருக்கம்

bus container accident.. two person death...

சேலம் அருகே அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி வேகமாக மோதியதில் பேருந்து விபத்திற்குள்ளானது. 

இதில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தலைவாசல் போலீசர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த, இர்ஷத் அலி என்பவர் தூங்கியதாலேயே விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!