
கிருஷ்ணகிரி:
பொதுமக்களைச் சென்றடையும் வகையில் கட்சிக்கு வேறு புதிய பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பர்கூர் ஒன்றிய முன்னாள் அதிமுக துணைச் செயலாளர் வேலவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், “எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்ற அமைப்பு பெயர், மக்கள் மத்தியில் உடனடியாக நினைவுக்கு வராத காரணத்தால், பொதுமக்களை சென்றடையும் வகையில், வேறு புதிய பெயர் வைக்க வேண்டும்.
புதிய கட்சியின் மாநில மாநாட்டை கிருஷ்ணகிரியில் நடத்த வேண்டும்.
தீபாவின் கணவர் மாதவன், கட்சியில் முக்கிய பொறுப்பை ஏற்று, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
தீபாவின் ஒப்புதல் இல்லாமல் பெறப்படும் உறுப்பினர் படிவங்கள் ஏற்கப்படாது” என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.