பொங்கல் விடுமுறையை நீக்கியது மத்திய அரசு - தமிழகத்துக்கு தொடர்ந்து விழும் அடி

First Published Jan 9, 2017, 6:23 PM IST
Highlights


பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் போற்றி பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டை ஒரே அறிவிப்பில் பொசுக்கி விட்டனர் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும்.

இதனை தொடர்ந்து காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை பாலாறு பிரச்சனை என அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு அடியாக இந்திய அரசு விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களை கொந்தளிக்க செய்யும் இந்த அறிவிப்பில் பொங்கல் விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழர் பாரம்பரிய விளையாட்டு நசுக்கப்பட்ட நிலையில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது..

click me!