ஏடிஎம்மில் இருந்தது கள்ள நோட்டுகள் அல்ல - வங்கி விளக்கம்

 
Published : Oct 06, 2016, 03:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஏடிஎம்மில் இருந்தது கள்ள நோட்டுகள் அல்ல - வங்கி விளக்கம்

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டுக்கள் அல்ல என பாங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டுக்கள் என எழுந்து புகார்களுக்கு பாங்க் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

செங்கல்பட்டில் வசிப்பவர் தமிழரசு. இவர் ரயில்வே கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றுகிறார். ஒரு வேலையாக சென்னை வந்த தமிழரசு சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வாசலில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார்.

அப்போது அவர் எடுத்த  பணத்தில் 27  ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசு ரூபாய் நோட்டுகளுடன் வங்கி அலுவலகத்துக்கும் , பெரிய காஅவல் நிலையத்திலும் புகார் அளித்தார். பணத்தையும் ஒப்படைத்தார் . ஏடிஎம் இயந்திரத்தில் தனது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்ததில் கள்ள நோட்டுகள் வந்ததாக  ரயில்வே ஊழியர் தமிழரசு பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இதற்கிடையே தமிழரசுவின் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டாம் என அறிவுறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கள் தவறுதலாக நிரப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த குழப்பத்தால் ரயில்வே ஊழியர் தமிழரசு புகார் அளித்துள்ளார் என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் போலீசார் தெளிவடைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!