இந்தியாவை  ‘இந்தி’ யாக மாத்திடாதீங்க…வெங்கய்யா நாயுடுவை கலாய்த்த ஸ்டாலின்…

Asianet News Tamil  
Published : Jun 26, 2017, 06:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இந்தியாவை  ‘இந்தி’ யாக மாத்திடாதீங்க…வெங்கய்யா நாயுடுவை கலாய்த்த ஸ்டாலின்…

சுருக்கம்

No change India as hindiya....stalin speech

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனது தாய்மொழி இந்தி என கூறியதை சுட்டிக்காட்டி பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவர் தனது தாய்மொழியை மாற்றுவது தாளை மாற்றுவதற்கு சமம் என தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது  பிறந்தநாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைரவிழா ,வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில்  நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசிய இக்கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

தனது தாய்மொழி இந்தி என்று விழா ஒன்றில் வெங்கய்யா நாயுடு  பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,  ஆந்திராவில் பிறந்த மத்திய அமைச்சர்  வெங்கய்யா நாயுடு தனது தாய்மொழியை மாற்றி விட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம் என்றும் குறிப்பிட்ட மு.க ஸ்டாலின் இந்தி திணிப்பை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று கூறினார்

தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதும் மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக திமுக திகழ்வதாக அப்போது  மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் வெற்றி, தோல்வி என எதைக் கொடுத்தாலும் அதை சமமாக, நினைத்து  தமிழக மக்களுக்காக தொடர்ந்து திமுக பாடுபடும் எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில், மக்களை சந்தித்து திமுக ஆட்சி அமைக்கும் காலம் வெகு தொலைவில்லை இல்லை என்றும், அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
4 லட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம்.. திமுக அரசு பழிவாங்கிவிடுச்சு.. அடுத்த ஆட்சியில் தீர்வு.. சொல்வது யார் தெரியுமா?