பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்..? மத்திய அரசு வெளியிட்ட முக்கியமான தகவல்..

Published : Mar 24, 2022, 07:10 PM IST
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்..? மத்திய அரசு வெளியிட்ட முக்கியமான தகவல்..

சுருக்கம்

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் அமர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ''தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4,000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22 ஆண்டில் மத்திய அரசு மதிப்பிட்டது. அதன்படி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ததா?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவியின் எழுத்துபூர்வமானப் பதில் அளித்துள்ளார். அதில், ''தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ஆண்டின் படி  ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அல்லது 6 முதல் 14 வயது இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஊட்டச்சத்துடன் சமைக்கப்பட்ட மதிய உணவு பெற தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதத்தை உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவு அளிக்கப்படுகிறது. இது, தொடக்கப் பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனவும் அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால், முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன எனவும் பதில் அளித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்