இந்த புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி!!

By Narendran SFirst Published Oct 28, 2022, 6:13 PM IST
Highlights

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் கூட்டாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், பான் பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாகன விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்... அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மதுரைக்கிள் அறிவுறுத்தல்!

அதேபோல், இயற்கை புகையிலை விற்பனைக்கும் தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர். இந்த தடையை நீக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு மீதான வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை.  

இதையும் படிங்க: சென்னை போலீஸ் அதிரடி ரைடு !! நேற்று ஒரே நாளில் அடிதடி வழக்கில் 92 குற்றவாளிகள் கைது..

விவசாயிகளிடம் புகையிலை இலைகளை பெற்று, வெள்ள நீர் தெளித்து எந்த வேதியியல் பொருட்கள் சேர்க்காமல் விற்பனை செய்யலாம். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்ய தடை இல்லை.  என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

click me!