தமிழகத்தில் கொரோனா BA.4 தொற்று ஏற்பட்ட முதல் நபர் எப்படி இருக்கிறார்? சுகாதார துறை செயலர் விளக்கம்..!

By Kevin KaarkiFirst Published May 24, 2022, 9:36 AM IST
Highlights

இதன் காரணமாக இவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதே மர்மமாக உள்ளது என சுகாதார துறை செயலர்  தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் BA.4 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் நான்கு பேர் அடங்கிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட இளம் பெண் எந்த பகுதிக்கும் பயணம் செய்யாத நிலையில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான இவர் ஒமிக்ரான் BA.4 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது குணம் பெற்று இருக்கிறார் என தமிழ் நாடு மாநில சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதே மர்மமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

குணமடைந்தனர்:

“ஒருவேளை வைரஸ் தொற்று பரவிக் கொண்டு இருக்கும் போது இவருக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். நம் மாநிலத்தில் இவருக்குத் தான் முதலில் இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இவர் முழுமையாக குணம் பெற்று விட்டார்,” என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். 

மே 4 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் 45 வயது தாயாருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையை தனியார் ஆய்வகம் ஒன்றில் எடுத்துக் கொண்டனர். அதில்  தாயாருக்கு கொரோனா வைரஸ் BA.2 தொற்றும் மாணவிக்கு BA.4 தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இரு வேறு வைரஸ் தொற்றுகளும் ஒமிக்ரான் வேரியண்டின் திரிபுகள் ஆகும். 

கொரோனா தொற்று:

தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளிலும் 73 சதவீதம் BA.2 வகை தொற்று மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதே போன்று சமீபத்தில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மருத்துவ கல்லூரிகளில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் BA.2 வகையை சேர்ந்தது ஆகும். 

“வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, மூன்றே நாட்களில் நோய் தொற்றில் இருந்து குணம் பெற்று விட்டனர்,” என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்திய அரசு BA.4 ரக தொற்று நம் நாட்டில் அச்சப்படக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

click me!