கடலூரை சேர்ந்த 80% பேர் பணியாற்றுகிறார்கள்.! ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் இழப்பீடு- என்எல்சி விளக்கம்

Published : Mar 19, 2023, 09:36 AM IST
கடலூரை சேர்ந்த 80% பேர் பணியாற்றுகிறார்கள்.! ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் இழப்பீடு- என்எல்சி விளக்கம்

சுருக்கம்

கடலூர் மாவட்ட வளர்ச்சியின் அடையாளம் என்.எல்.சி என தெரிவித்துள்ள என்.எல்.சி நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 80% பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பணியாற்றுவதாக கூறியுள்ளது. 

25லட்சம் இழப்பீடு

நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலருந்து , ஏழை,எளிய மக்களின் நிலங்களை அபகரிப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் அரசியில் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் எல் சி இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் சுமார் 62% தமிழகத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கி மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. என்எல்சிக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி மட்டுமே,

28 வருடங்களாக சிறையில் அவதிபடும் இஸ்லாமிய கைதிகள்.! கருணாநிதி பிறந்தநாளில் விடுவித்திடுக..!-வேல்முருகன்

கடலூரை சேர்ந்த 80% பேருக்கு பணி

நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்கள், வாரிசுகள் பயன்பெறும் வகையில் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் வகையில் பயிற்சி வகுப்புகளும் என்எல்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.1977 ஆம் ஆண்டு முதல்  1989 ஆம் ஆண்டு வரை நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களில் தகுதியான நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் படி 1827 நபர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 15,000 நபர்களுக்கு ஒப்பந்த பணிகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வளையமாதேவி மேல் பாதி, வளையமாதேவி கீழ் பாதி, மும்முடிச் சோழகன், கத்தாழை கிராம பகுதியில் உள்ள 594 நில உரிமை அவர்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீடான ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறிக்கும் தமிழக அரசு.! என்எல்சி நிறுவனத்திற்கு துணை போவது ஏன்.?- சீமான்

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!