திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்ப இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
undefined
இதையும் படிங்க:- இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு செக் வைக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. நாளை என்ன நடக்கும்? திக்.. திக்..!
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:- ஃபர்ஸ்ட் நைட்! இன்ட்ரஸ்ட் இல்லாத கணவர்! ஆண்மை பரிசோதனை செய்ததால் மனைவி, மாமியாரை கதறவிட்ட புதுமாப்பிள்ளை.!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் துரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.