சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பணிகளை துவகங்கியுள்ளது.சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் பணி
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சுரங்கப்பணிகளை விரிவுப்படுத்த என்எல்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலங்களை கையகப்படுத்துவதற்கு கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
என்எல்சி நிர்வாகம்
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் செயல்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் இன்று புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் நிலத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த கிராமத்தில் ஏற்கெனவே வடிகால் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அந்த வாய்க்கால் பணியை தொடர்வதற்காக விலை நிலங்களில் நவீன எந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணியை துவக்கி நடந்து வருகிறது.
பாதுகப்பு பணியில் போலீஸ்
விளைந்து நிற்கும் பயற்களை நவீன இயந்திரங்கள் மூலம் அழிப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி ஜியாஉல்ஹக். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர்களது தலைமையில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்
Tamil Nadu Rain : அலெர்ட்.. அடுத்த 6 நாட்களுக்கு கனமழை.! எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம் உள்ளே