இதுவரை 30 ஆயிரம் பேர்... நம்ம டார்கெட் 30 லட்சம் உறுப்பினர்கள்... நித்யானந்தா கட்சியின் ஆள் சேர்க்கை அபாரம்! எப்படி?

First Published Apr 30, 2018, 11:22 AM IST
Highlights
nithyanandha started a new political party and called youngers


ஆன்மீக பிரமச்சாரி என சொல்லிக்கொண்டு தனக்கென ஒரு  பக்தர்கள் கூட்டத்தை கட்டி மேய்த்துக்கொண்டு வலம் வந்துக்கொண்டிருக்கும் நித்தி கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், கட்டிலில் சல்லாபத்தில் ஈடுபட்டு ஃ பிரீ விளம்பரம் மூலம் பட்டிதொட்டி எங்கும்  பேமஸ் ஆனார்.
நித்தியின் இந்த ஆன்மீக ஆராய்ச்சியால் தமிழகத்தில் நித்தியானந்தாவின் ஆஸ்ரமங்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டது. இதனை அடுத்து  நித்தி மீது பல அடுக்கடுக்கான புகார்கள் அவரது சிஷ்யர்களே சுமத்தினர்.

தொடர்ந்து புகார், வழக்கு, நீதிமன்றம் என அலைந்த நித்தியானந்தா அப்படியே சைலேன்ட்டாக இருந்தார். பிறகு மதுரை  ஆதினத்துடன் சேர்ந்த அவர்  இளைய ஆதினமாக இருந்தார். ஆதினத்தை பின்னுக்குத் தள்ளி ஆதினமாக ப்ளான் போட்டது தெரியவே கடுப்பான ஆதினம் அவரை வெளியே அனுப்பிவிட்டார்.
தனக்கு ஆதரவளிப்பவர்கள் யெல்லாம் இப்படி திருப்பி ரிவீட் வாங்கிக் கொண்டிருந்த நித்தி,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்து மற்றும் கலைஞர், கனிமொழி  என இது மதத்திற்கு எதிராக இருப்பவர்களை கொச்சையான முறையில் விமர்சித்து சிறுமிகளை வைத்து வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டனர் நித்தியானந்தா சிஷ்யர்கள். சிறுமிகள் செய்த இந்த சிறுபிள்ளை தனமான வேலைகள் எடுபடாமலே போனது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத நித்தி தனக்கென ஒரு அரசியல் அமைப்பு உருவாக்க  விரும்பினார்.  . திருவண்ணாமலையை சேர்ந்த சில இளைஞர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலமாக நித்தியானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர் போடும் பணியை செய்தத் தொடங்கினார்.தற்போது அந்தக் டீமை வைத்து, “நித்தியானந்தா அரசியல் சேனை” ஆன்மீக அரசியல் அமைப்பை துவங்கியுள்ளார். “புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம், இளைஞர்களே இணைவீர்” என உறுப்பினர் சேர்க்கைக்காக போஸ்டர் அடித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஆன்மிக அரசியல் என்று அறிவித்து ரஜினி ஒரு பக்கம் அரசியல் ஏற்பாடுகளில் இறங்கியிருக்க, அதே ஆன்மிக அரசியல் என்ற பெயரோடு “நித்யானந்த சேனை” என்ற அமைப்பைத் துவக்கி உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாகியிருக்கிறார்கள் நித்தி பக்தர்கள்.“தேசியமும் தெய்வீகமும் எங்களின் இரு கண்கள்” புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம்.. இளைஞர்களே இணையுங்கள் என்ற வாசகங்களோடு திருவண்ணாமலை முழுதும் ஒட்டப்பட்டிருக்கும், ‘நித்யானந்த சேனை’ போஸ்டர்கள் இப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம் இந்த கட்சியை தொடங்கியது யார்?  நித்யானந்தா சேனை அமைப்பின் மாநிலத் தலைவரான சிவா தமிழன், நித்தியானந்தா வின் நெருங்கிய நண்பராம். இவர் நித்தியானந்தா திருவண்ணாமலையில் “விடிஎஸ் ஜெயின்” பள்ளியில் படித்தபோது அவரோடு ஆறாவது முதல் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தவர்.
இந்நிலையில், தான் நேரடியாக களத்தில் இறங்காமல் தன் வகுப்பு நண்பனை  அமைப்பை ஏற்படுத்த ஆசி கொடுத்திருக்கிறார் நித்தி.

இந்த அமைப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் பேரை நித்யானந்தா சேனையில் சேர்த்திருக்கிறோம். தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்திருக்கிறோம். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் பலர் எங்கள் அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள். விரைவில் நித்யானந்த சேனை தமிழகம் முழுதும் கட்டமைக்கப்படும் என சொல்கிறார்கள் அந்த அமைப்பை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள்.

மேலும், தன்னை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு இனி இந்த அமைப்பின் மூலமாக பதிலடி கொடுக்க த்தான் இந்த புதிய கட்சியாம்.

click me!