முதல்வர்கள் மாறினாலும் பிரச்சனை தீரலையே… வறுத்தெடுக்கும் நித்தியானந்தா!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 5:59 PM IST
Highlights

தண்ணீரின் வீட்டில் நாம் வீடு கட்டியதால் தற்போது நம் வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர்கள் மாறினாலும் சென்னையில் வெள்ளம் ஏற்படும் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீரின் வீட்டில் நாம் வீடு கட்டியதால் தற்போது நம் வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கட்டுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வெள்ள நீர் வடியாமல் குளம் போல் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வெள்ள நீரை ராட்சத மோட்டர்கள் மூலம் விரைந்து  வெளியேற்றவும் உத்தரவிடார். அவரை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌, சென்னை மாநகர்‌ மற்றும்‌ புறநகர்‌ பகுதியில்‌ மழைநீர்‌ தேங்கிய இடங்களை நேரில்‌ பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ நிவாரணப்‌ பொருட்களை வழங்கினர்‌.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் மீது இடிந்து விழுந்ததுடன் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதை அடுத்து மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000, கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார். இதேபோல் டெல்டா மாவட்டங்களுக்கு சென்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை பார்வையிட்டனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த நிலையில் சென்னை வெள்ளம் குறித்து நித்தியானந்த கேளியாக கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

"

இதுக்குறித்த அவரது வீடியோவில், சென்னையில் வெள்ளம் பல ஆண்டுகளாக வந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார். பின்னர் அவருக்கு அடுத்து வந்தவரும் வெள்ளத்தை பார்வையிட்டார்.  தற்பொதைய முதல்வரும் சென்னை வெள்ளத்தை பார்வையிடுகிறார். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் எத்தனை முதல்வர்கள் வந்தாலும் சென்னைக்கு வெள்ளம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனை முடியவில்லை என்றார்.  மேலும் தண்ணீரின் வீட்டில் நாம் வீடு கட்டியதால் தற்போது நம் வீட்டில் தண்ணீர் வீடு கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

click me!