தனியார் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிய கோர விபத்து.. பெண்கள் உட்பட 9 பேர் பரிதாப பலி

Asianet News Tamil  
Published : Feb 18, 2018, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
தனியார் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிய கோர விபத்து.. பெண்கள் உட்பட 9 பேர் பரிதாப பலி

சுருக்கம்

nine died in kanchipuram accident

காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு வேனில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், சரக்கு வேனில் பயணித்த 7 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழந்த இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!