உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு… 9 நீதிபதிகளில் ஒரு தம்பதிகள்!!

Published : Jun 03, 2022, 06:56 PM IST
உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு… 9 நீதிபதிகளில் ஒரு தம்பதிகள்!!

சுருக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார் (S.Sathikumar) கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனை அடுத்து குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். நிரந்தர நீதிபதிகளான 9 பேருக்கும், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நாளை பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைக்கவுள்ளார்.

நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ள 9 நீதிபதிகளில் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி தம்பதிகள் ஆவர். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்த 9 பேரும் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களை வரவேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்க உள்ளார். முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள்  அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

இதற்கு குடியரசுத் தலைவரும்  ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தற்போது  சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதிவியேற்க உள்ளனர். நாளை பதவியேற்க உள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!