குடிபோதையில் 14 அடி நீளம் கொண்ட விஷப் பாம்புடன் செல்பி…5 இளைஞர்களை கைது செய்த போலீஸ்!

First Published Aug 7, 2018, 2:24 PM IST
Highlights

குடிபோதையில் 14 அடி நீளம் கொண்ட விஷப் பாம்புடன் செல்பி….

கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேரம்பாடி அருகே குடிபோதையில் அதிக விஷமுள்ள  14 அடி நீளம் கொண்ட அறிய வகை ராஜநகத்தை பிடித்து ஆபத்தை உணராமல்  துன்புறுத்தி செல்பி எடுத்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.   

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டியல் 2-க்குட்பட்டதும், அழிவின் பிடியில் உள்ளதுமான ராஜநாகம் கணிசமாக  உள்ளது.

சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சந்தனமாக்குன்னு, கண்ணம்வயல், நாயக்கன்சோலை, புஞ்சைக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் குடியிருப்பு பகுதிகளில் வந்த 10-க்கும் மேற்ப்பட்ட ராஜநாகங்கள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.

இதனை ஒரு சமூக பணியாக ராஜ்குமார் என்பவர் மேற்க்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த4-ம் தேதி சேரம்பாடி பஜாரை ஒட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் மூங்கில் மரத்தில் படுத்திருந்த ராஜநாகத்தை  இளைஞர்கள் நிலர் பிடித்து துன்புறுத்தி, தங்கள் தோளில் போட்டு செல்பி எடுத்து சமூகவளைதலங்களில் சிலர் பதிவு செய்திருந்தனர்.

இந்த பாம்பு  அதிக விஷ தன்மை கொண்டதாகும் . இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலர்கள் இது குறித்து  புகார் அளித்தனர்.

கூடலூர் வன அலுவலர் திலீப் உத்தரவையடுத்து, சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்க்கொண்டர். பின்னர் ராஜநாகத்தை பிடித்து துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து.

சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன், ராமானுஜம்,  தினேஷ்குமார்,  யுகேஷ்வரன், விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரனையில் இவர்கள் அனைவரும் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இது போன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

click me!