உதகையில் கோலாகலமாகத் தொடங்கிய மலர் கண்காட்சி

By Dinesh TG  |  First Published Oct 4, 2022, 12:44 PM IST

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று கோலாகலமாக துவங்கியது இரண்டாம் சீசன் மலர் கண்காட்சி, இன்று தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்காக  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோ ஆர்கானிக் (இயற்கை வேளாண்மை நோக்கி) என்ற வாசகம் 2000 மலர் தொட்டிகளால் மலர் திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாம் சீசன் நடைபெறும். உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டாம் சீசன் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 

அதேபோல் இந்த ஆண்டு இரண்டாவது சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஜூன் மாதம் நடவு செய்யப்பட்ட நான்கு லட்சம் மலர் செடிகளை கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டது.

Latest Videos

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா; வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்த மலர் பாத்திகளில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாவது சீசனில் 70 வகையான மலர் செடிகள் பிற மாநிலங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், பூனே போன்ற இடங்களில் இருந்து விதைகள் பெறப்பட்டு டெலியா, சால்வியா, மேரி கோல்ட், இன்கா மேரி கோல்ட், பிரெஞ்சு மேரி கோல்ட், கேலண்ட்ல டையாந்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர் போன்ற மலர் செடிகள் பத்தாயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ணமலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்காக  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோ ஆர்கானிக் (இயற்கை வேளாண்மை நோக்கி) என்ற வாசகம் 2000 மலர் தொட்டிகளால் மலர் திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரியை நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றும் பொருட்டாக சுற்றுலாப் பணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புல்வெளி மைதானத்தில் நெகிழியை தவிர்க்கும் மஞ்சப்பை பயன்படுத்தும் நோக்கமாக ஐந்தாயிரம் மலர் தொட்டிகளில் மீண்டும் மஞ்சப்பை என வைக்கப்பட்டுள்ள அலங்காரம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓஹோ... இதுதான் கோவை குசும்பா... மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை வழிபாடு..!

நேற்று துவங்கிய இந்த இரண்டாம் மலர் கண்காட்சி இம்மாதம் இறுதிவரை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோலாகலமாக துவங்கிய இந்த இரண்டாம் சீசன் மலர் கண்காட்சியை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து பூங்காவை கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 

உதகையில் துவங்கிய இரண்டாம் சீசன் மலர்கள் காட்சியை முதல் நாளில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 80 பேர் கண்டு ரசித்துள்ளனர்.

click me!