Diwali: தீபாவளிக்கு அடுத்த நாள் உள்ளூர் விடுமுறை..? வெளியான சூப்பர் தகவல்..

By Thanalakshmi VFirst Published Oct 18, 2022, 3:05 PM IST
Highlights

இந்தாண்டு திங்கள்கிழமை தீபாவளி வருவதால், அதற்கு அடுத்த நாள் விடுமுறை அளித்தால், சொந்த ஊர் செல்பவர்களுக்கு திரும்பி வர வசதியாக இருக்கும் என்றும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எனவே அனைத்து பள்ளி,கல்லுரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

இந்தாண்டு வரும் அக்.24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை  கொண்டாடப்படவுள்ளது. இதனையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளி இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

பண்டிகையொட்டி கடைகளில் தீபாவளி விற்பனை களைக்கட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிக்கை பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாடப்பட்டது. இதனால் இந்தாண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாட  ஏராளமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க:Watch : தீபாவளி விற்பனை - நெல்லையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை படுஜோர்!

இதனால் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்தாண்டு வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால், சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,  வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள்  தொடர் விடுமுறையாக கிடைத்தது.

ஆனால் இந்தாண்டு திங்கள்கிழமை தீபாவளி வருவதால், அதற்கு அடுத்த நாள் விடுமுறை அளித்தால், சொந்த ஊர் செல்பவர்களுக்கு திரும்பி வர வசதியாக இருக்கும் என்றும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எனவே அனைத்து பள்ளி,கல்லுரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க:Deepavali: அதிர்ச்சி !! பிளாட்பார்ம் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய தெற்கு ரயில்வே.. எவ்வளவு தெரியுமா..?

click me!