Tamilnadu Rain : 5 நாட்கள் கனமழை.. தமிழகத்தில் வெளுத்து வாங்க போகிறது.. என்னென்ன மாவட்டங்கள் ?

By Raghupati RFirst Published Dec 10, 2021, 1:31 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவான வானிலையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை (சனிக்கிழமை) கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை மறுநாள்  (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 13-ஆம் தேதி  (திங்கள் கிழமை)  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,  உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

14ஆம் தேதி  (செவ்வாய் கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குந்தா பாலம் (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி) தலா 4, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கோத்தகிரி (நீலகிரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) , சங்கரிதுர்க் ( சேலம் ), சேரன்மகாதேவி (திருநெல்வேலி ) தலா 3, திண்டுக்கல் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), மீமிசல் (புதுக்கோட்டை), தென்காசி (தென்காசி), ஊத்துக்குளி (திருப்பூர்), கன்னியாகுமாரி (கன்னியாகுமாரி), குமாரபாளையம் (நாமக்கல்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சி), கெட்டி (நீலகிரி), அலங்காயம் (திருப்பத்தூர் ) தலா 2 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!