Tamilnadu Rains : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை..கூலான அப்டேட் சொன்ன வானிலை மையம்.. எங்கு தெரியுமா ?

Published : Mar 26, 2022, 01:33 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை..கூலான அப்டேட் சொன்ன வானிலை மையம்.. எங்கு தெரியுமா ?

சுருக்கம்

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு :

இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 29ஆம் தேதி  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிக மழை பெய்த இடங்கள் :

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

அதிகபட்சமாக நேற்று கோவை சின்கோனா பகுதியில் 30மிமீ மழை பெய்துள்ளது. அரிமளம், சின்னகல்லாறு, சிவகாசி, வால்பாறை 20மிமீ, ஆழியாறு, திருவிடை மருதூர், பெரியாறு, அமராவதி அணை, கொடவாசல், திருமூர்த்தி அணை 10மிமீ மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சராசரியாக 95 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெயில் நிலவியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!